தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இன்று (அக்.10) இயற்கை எய்திய முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்து இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சங்கீதா முதலமைச்சரை சந்தித்து ஆறுதல் கூறினார்.