உலகெங்கிலும் உள்ள மலையாளி சகோதரர்களுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும். இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையையும் வாழ்வையும் பிரதிபலிக்கட்டும் என கூறியுள்ளார்.