அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் முன்பகை காரணமாக இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக மூன்று பேர் மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை(35). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் முன் பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன் பகை காரணமாக பாலமுருகன் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து அழகு மலையை அசிங்கமாக திட்டி கத்தியால் கையில் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அழகுமலை புகாரின் பேரில் தாலுகா போலீசார் நேற்று(6. 10. 23) பாலமுருகன் உள்ளிட்ட வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். இந்த செய்தி குறிப்பை போலீசார் இன்று(7. 10. 23) வெளியிட்டுள்ளனர்.