புதிய பேருந்து நிலையம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்

59பார்த்தது
விருதுநகர் மக்கள் நல கூட்டமைப்பு சார்ப்பில் தனியார் மண்டபத்தில் 33 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த  புதிய பேருந்து நிலையம் பலரின் கோரிக்கைகள் போராட்டங்களுக்கு பின் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் புதிய பேருந்து நிலையம்,   நகரை தாண்டி ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால் புதிய பேருந்து நிலையம் செயல்படுவதற்கு முன்னால் மதுரை மற்றும் ராஜபாளையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாம்பிகை பங்களா வந்து செல்லும் வழித்தடமாக இருந்தது. ஆனால் தற்போது புதிய பேருந்து நிலையம் செயல்பட ஆரம்பத்தில் இருந்து மீனாம்பிகை பங்களா வழித்தடத்தில் எந்த பேருந்துகளும் வந்து செல்லாததால் பயணிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு விருதுநகர் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் அனைத்துக் கட்சி சார்பில் மீனாம்பிகை வழியாக பேருந்து இயக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் செயலாளர் மகேந்திரன், ஆலோசகர் அனைத்து கட்சி தலைவர்கள் அனைத்து சமுதாய பெரியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி