பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய 4 பேர் மீது வழக்கு

68பார்த்தது
விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு மனைவி பிரியா, 29; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50; இவரது மகன்கள் பரத், 20; சாரதி, 24; ராகுல், 22; உறவினர்கள். இவர்களுக்குள் நிலம் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 3ம் தேதி, வி. அரியலுாரில் உள்ள பிரியா நிலத்தில் உள்ள சவுக்கு மரத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் ஏறியுள்ளார். இதைப்பார்த்த பிரியா, கலையரசனை கீழே இறங்கும்படி கூறிய போது, ரவி உட்பட 4 பேரும் சேர்ந்து பிரியாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார், ரவி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி