தமிழ்நாடு பாடத்திட்டத்தின் மீது ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு!

73பார்த்தது
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் மீது ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு பாடத்திட்டத்தில், தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு. கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஆர்.என்.ரவி, "தமிழ்நாடு பாடத்திட்டத்தில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது. கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உட்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன" என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you