எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி - சாடிய மாதவி லதா

77பார்த்தது
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி - சாடிய மாதவி லதா
தெலுங்கானாவின் ஐதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாதவி லதா தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி வெற்றி பெற்றார். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் மாதவி லதா டெல்லியில் நேற்று (ஜூன் 10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதுக்கு பதலளித்த மாதவி லதா, “மோடிக்கு எதிரே அமர, படித்துக் கற்றுக் கொண்டு வர வேண்டும்” என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி