ஆதாருடன் செல்போன் எண்ணை இந்த மாதத்துக்குள் இணைக்காவிட்டால் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்படும் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் வதந்தியே.
முதியோர் உதவித்தொகை பெரும் பயனாளிகளின் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளும் போது, பெரும்பாலான எண்கள் தவறாக உள்ளதால், சரியான எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதற்கு கால நிர்ணயம் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், இந்த மாதத்துக்குள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று வதந்தி பரப்பப்படுகிறது.