வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 76 கி.மீ தான்...

68பார்த்தது
வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 76 கி.மீ தான்...
இந்தியாவில் மக்களால் அதிக வேகமாக பயணிக்கும் ரயில் என நம்பப்படும் வந்தே பாரத் ரயில் சராசரியாக 76.25 கி.மீ என்ற குறைந்த வேகத்தில் தான் பயணம் செய்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2020-21-ம் ஆண்டில் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 84.48 கிலோமீட்டராக இருந்தது.

தற்போது இந்த 2023-24-ம் நிதியாண்டில் இது 76.25 கிலோமீட்டராக வேகம் குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில் ரயில்கள் வேகமாக செல்வதற்கான வசதிகள் இல்லை எனவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இந்த பணி நடப்பதால் தான் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி