ராமோஜி ராவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது!

79பார்த்தது
மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத் தலைவருமான ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வயது முதிர்வு காரணமாக நேற்று அவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய உடல் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது. முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு, ராமோஜி ராவின் உடலை தனது தோளில் தூக்கிவந்து தகன மேடையில் வைத்தார். அதன்பின், ராமோஜி ராவின் மூத்த மகன் கிரன் தனது தந்தைக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டார். இதையடுத்து, சந்தன கட்டைகள் வைத்து அரசு மரியாதையுடன் ராமோஜி ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி