“பஸ் எப்போ வரும்?” என கேட்டவருக்கு சரமாரி அடி

74பார்த்தது
தெலங்கானா மாநிலத்தின் ஷாத் நகர் நகரிலிருந்து ஹைதராபாத் செல்ல பேருந்துகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. வெகு நேரமாக காத்திருர்ந்த பயணி ஒருவர் இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுநர் பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக் கண்ட சக பயணிகள், தாக்குதல் நடத்திய ஓட்டுநரிடம் சமரசம் செய்த நிலையில் அவர் தாக்குதலை நிறுத்திக் கொண்டார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.