இருவரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு

82பார்த்தது
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 34; இவர், சில தினங்களுக்கு முன், அதே ஊரில் உள்ள மகேஸ்வரி என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக முன்பணம் கொடுத்துள்ளார். இதையறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி, 55; இவரது மகன்கள் கோகுல், 28; ராகுல், 25; ஆகியோர் 'நாங்கள் வாங்க வேண்டிய நிலத்தை, நீங்கள் எப்படி பேசி முடிக்கலாம்' எனக்கூறி கடந்த 5ம் தேதி தகராறு செய்து, கோதண்டபாணியை திட்டியதோடு, அவரது தாய் தாட்சாயணியை, 54; தாக்கினர். புகாரின் பேரில், சுப்ரமணி உட்பட 3 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி