காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்

61பார்த்தது
காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்
அரசு மருத்துவமனைகளில், அரசு ஊழியர்களும் இனி காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைப் பெறலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் வரை அறுவை சிகிச்சைகளைப் பெறலாம். அத்துடன், 10 லட்சம் ரூபாய் வரை சிறப்பு சிகிச்சைகளைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உயர்தர சிகிச்சைப் பெறுவதில் நீடித்துவந்த சிக்கல் தீர்ந்ததாக பயனாளிகள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.