விபத்தில் முதியவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை

70பார்த்தது
விழுப்புரம் வட்டம், கிருஷ்ணாபுரம், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலு மகன் கிருஷ்ணன்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவந்தாடு- மடுகரை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள ஒரு கோயில் எதிரே வந்த பைக்கும், கிருஷ்ணன் ஓட்டிச் சென்ற பைக்கும் மோதியது. இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், வளவனூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி