விழுப்புரம்: தாமதமாக வந்த விரைவு ரயில்; பயணிகள் அவதி
சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு வழக்கமாக மாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டிய, செந்தூர் விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை புறப்படத் தயாராக இருந்தநிலையில், ரயில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் விரைந்து சரி செய்தனர். இதன் காரணமாக மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து விரைவு ரயில் புறப்பட்டது. இந்நிலையில், விழுப்புரத்துக்கு மாலை 6.45 மணிக்கு வர வேண்டிய செந்தூர் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு வந்தடைந்தது. சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு இந்த ரயில் புறப்பட்டது. இந்த ரயில் தாமதம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.