விழுப்புரம் இந்திரா நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் திருப்பதி மகன் ரூபன் (26). திருமணம் ஆகாதவா். இவா் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சிப்பாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் தனிமையில் இருந்து வந்த ரூபன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து, 108 அவசர ஊா்தி ஊழியா்கள் அவரை பரிசோதித்தபோது, ரூபன் இறந்து போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.