அதிவிரைவு ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான வாலிபர்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் ஆகாஷ்ராம், (25); விவசாயி. இவர், நேற்று(செப்.21) மாலை 6: 45 மணிக்கு முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள 2வது பிளாட்பாரத்தை கடந்தார். அப்போது, குருவாயூர் - சென்னை நோக்கி செல்லும் அதிவிரைவு ரயிலில், ஆகாஷ்ராம் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.