விக்கிரவாண்டி - Vikravandi

விழுப்புரம்: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

விழுப்புரம்: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக குடிநீரில் அடிக்கடி கழிவு நீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. ஒரு சில நாட்கள் நன்றாக வருவதும், பிறகு கழிவு நீர் கலந்து வருவதுமாக உள்ளது. எங்கேயோ குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் கழிவு நீர் கலப்பதால், வீடுகளுக்கு வரும் குடிநீரில், கழிவு நீர் கலந்து மங்கலாக வருகிறது. இது குறித்து, பல முறை நகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், நோய் பாதிப்பு ஏற்படுவதற்குள், அதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்' என்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా