விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திடீர் ஆலோசனை

84பார்த்தது
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திடீர் ஆலோசனை
விக்கிரவாண்டி தொகுதி தி. மு. க. , எம். எல். ஏ. வாக இருந்த புகழேந்தி, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.

இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் மூலம் விரைவில் வெளியாக உள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற சூழ்நிலை உள்ளதால், ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சி நிர்வாகிகளுக்குள் போட்டி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ. தி. மு. க. , போட்டியிடுவதால், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு, திண்டிவனத்தில் மாஜி அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் நேற்று ரகசிய ஆலோசனை நடந்தது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் என பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள அனைத்து ஓட்டுச்சாவடிக்கும் பொறுப்பு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொகுதி முழுதும் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணிகள், தொகுதியில் ஜாதி வாரியாக பட்டியல் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளுமாறு மாஜி அமைச்சர் சண்முகம் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி