2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் மார்ச் 9-ம் தேதியான நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு வருண் சக்கரவர்த்தி தான் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார். அதனால் அவருக்கு எதிரான திட்டங்களோடு வருவோம் என்று பேசியுள்ளார்.