அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறது என அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "விவாதத்துக்காக நான் கூறியதையும், அதிமுக பொதுச்செயலாளர் கூறியதையும் பரபரப்புக்காக திரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று பேட்டியளித்துள்ளார்.