நடிகர் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், " ஃபர்ஸ்ட் சிங்கிள் சூன் மாமே, சுட சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்" என பதிவிட்டுள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.