விழுப்புரம் மாவட்டம், வானுார் தெற்கு ஒன்றிய அ. ம. மு. க. , செயலாளர் சதீஷ், மாவட்ட அ. ம. மு. க. , ஜெ. , பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் முருகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செம்மல், பொதுக்குழு உறுப்பினர் குறளரசன் தலைமையில் நேற்று அ. ம. மு. க. , வைச் சேர்ந்த நிர்வாகிகள், அக்கட்சியல் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ. தி. மு. க. , வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் அ. தி. மு. க. , ஜெ. , பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், விக்கிரவாண்டி சிறுபான்மைப் பிரிவு செயலாளர் சர்புதீன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் பலராமன், ஐ. டி. , பிரிவு பேரூராட்சி செயலாளர் சசிகுமார், நகர இளைஞரணி வாசு உட்பட பலர் உடனிருந்தனர்.