தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டும் உதவி மையம்

67பார்த்தது
தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டும் உதவி மையம்
விழுப்புரத்தில் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் உதவி மைய எல். இ. டி. , திரையை கலெக் டர் திறந்து வைத்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மதி சிறகுகள் தொழில் மைய எல். இ. டி. , திரையினை, கலெக்டர் பழனி திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 31 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில், 3, 994 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் செயல்பாடுகளை பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் வகையில், மதி சிறகுகள் தொழில் மையத்தின் எல். இ. டி திரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மதி சிறகுகள் தொழில் மையமானது, தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு தொழில் மேம்பாட்டு உறுதுணை சேவைகளை வழங்குகிறது.

இங்கு பெறும் தீர்வுகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் புதிதாக நுழையும் தொழில் முனைவோர்களுக்கு நுழைவுத் தடைகள் மற்றும் இடையூறுகளைக் கடக்க உதவுகிறது.

இதன் மூலம், தொழில் திட்டத்தை தயாரித்து மதிப்பீடு செய்தல், தேவைப்படும் நிதியுதவி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களை அணுகி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி