விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி இருந்து வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தது. அப்போது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பொன்முடி தேர்வு செய்யப்பட்டார். பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ஆண்டின் தொடக்கத்தில் முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டது. அதன் பின் அலுவலகம் செயல்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து அல்லது அவரது அலுவலகத்திலோ ஏதேனும் குறை குறித்து புகார் தெரிவிக்க நினைத்தால் யாருமே இல்லாத அலுவலகத்தில் யாரிடம் புகார் தெரிவிப்பது என கேள்வி எழுப்புகின்றனர். ஆண்டின் தொடக்கத்தில் உயர்கல்வித்துறையில் இருந்த அமைச்சர் பொன்முடி பின்னர் இலாக்கா மாற்றப்பட்டு வனத்துறை அமைச்சராக தற்போது செயல்பட்டு வருகிறார். மேலும், நேற்று கூடுதலாக காதி மற்றும் கிராம தொழில்துறை பொன்முடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் வசம் இருந்து பரிக்கப்பட்ட உயர்கல்விதுறை அமைச்சர் என பதிக்கப்பட்ட பெயர் பலகையிலேயே அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. எம்எல்ஏ அலுவலகமே திறக்கப்படாமல் நான்காண்டுகள் கடந்து விட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.