நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படத்தின் டிரெய்லரை பார்த்து நடிகர் தனுஷை, ராஷ்மிகா மந்தனா பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 'தனுஷ் சார், நீங்கள் எப்படி நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளர் என அனைத்து வேலையையும் செய்கிறீர்கள்' என்று தெரிவித்திருக்கிறார். தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.