ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகல் குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல. அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது. ஆனால், பும்ரா தற்போது முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருந்தாலும் நம்மிடம் சிறந்த அணி உள்ளது" என்று கூறியுள்ளார்.