விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் கடந்த டிச.3ஆம் தேதி, அமைச்சர் பொன்முடி வெள்ளச் சேதங்களை பார்வையிடச் சென்றார். அப்போது, அவர் மீது இளைஞர்கள் சிலர் சேற்றை வீசினர். மேலும், அங்கிருந்த போலீஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது சேறு பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அங்கிருந்து அமைச்சர் வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ராமகிருஷ்ணன், விஜய ராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.