கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் புறவழிச்சாலையில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கட்டுமான இயந்திரம் தொடர்பான பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் விஜயகுமார் தனக்கு சொந்தமான கட்டுமான இயந்திரங்களில் உதிரி பொருட்கள், பழைய இரும்பு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை தேக்கி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் தனது குடோனில் வைக்கப்பட்டிருந்த ₹. 2. 5(இரண்டரை) லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான இயந்திரங்களின் உதிரி பாகங்கள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், இது சம்பந்தமாக திருக்கோவிலூர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் குடோனில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கடந்த வாரம்
பகல் நேரத்தில் குடோனில் புகுந்த மூன்று இளைஞர்கள் அங்கிருந்த கட்டுமான இயந்திரத்தின் உதிரி பாகங்களை லாவகமாக திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குடோனில் இருந்த பொருட்களை தேடிச் சென்ற இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்ற திருட்டுச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.