தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ‘மதி அனுபவ அங்காடி'யை தலைமைச் செயலக வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (பிப்., 10) திறந்து வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள், கைத்தறி துணிகள், அலங்கார பொருட்கள், ஆபரணங்கள், சிலைகள், உணவுப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இந்த அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைத் தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைவரும் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.