சேலம்: எடப்பாடி தனியார் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனின் தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்தார். கந்தகுரு என்ற மாணவனும், மற்றொரு மாணவனும் நேற்று மாலை பள்ளி வாகனத்தில் வீட்டுக்கு சென்றனர். அப்போது சீட் பிடிப்பது தொடர்பாக 2 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த கந்தகுரு மயங்கி விழவே தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயரிழந்தார். பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.