பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையான நிஷா என்பவர் தான் இறப்பதற்கு முன்னர் தனது ரூ. 72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சஞ்சய் தத்துக்கு விட்டு சென்றுள்ளார். வாழ்வில் ஒருமுறை கூட தனது அபிமான நடிகரை நிஷா பார்த்ததில்லை. அதே நேரம், சொத்துக்களை பெறும் எண்ணம் சஞ்சய்க்கு இல்லை என்றும், அதை நிஷா குடும்பத்துக்கு திருப்பி தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் வழக்கறிஞர் தெரிவித்தார்.