விழுப்புரம்: ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

81பார்த்தது
விழுப்புரம்: ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், விழுப்புரம் திருச்சி சாலையில், கடந்த செப். , 28ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, டாடா ஏஸ் மினி டெம்போவில் வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த முபாரக்அலி மகன் சையதுமுஸ்தபா, 40, என்பவர், தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியை ஒரு டன் அளவில் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து, சையதுமுஸ்தபாவை கைது செய்து, விழுப்புரம் கிளை சிறையில் அடைத்தனர். ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அவர் மீது, ரேஷன் அரசி கடத்தல் தொடர்பாக 8 வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு எஸ். பி. , பாலாஜி பரிந்துரையின் பேரில், சையதுமுஸ்தபாவை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்திட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன் பேரில், விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், நேற்று சையதுமுஸ்தபாவை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி