மணம்பூண்டியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

73பார்த்தது
2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர் அருகே அமைந்துள்ள நாயனூர் கிராமத்தில் சிட்கோ நிறுவனம் அமைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மற்றும் திமுகவினர் இணைந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் சட்டப்பேரவையில் சிட்கோ நிறுவனம் அமைப்பதாக அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பொன்முடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி