ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

69பார்த்தது
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் திருக்கோவிலூர் ஒன்றியம், காட்டுப்பையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று(ஆக 20) நேரில் பார்வையிட்டு படிவம் எண் 3, படிவம் எண் 1, வேலை வாய்ப்பு பதிவேடு, அடையாள அட்டை வழங்குதல் விண்ணப்பப் பதிவேடு, கிராமசபைக் கூட்டப் பதிவேடு மற்றும் சிறப்பு சமூக தணிக்கை கிராம சபை பதிவேடு, வருகைப் பதிவேடு, தலைப்பு வாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விபரப் பதிவேடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டைகள், புகார் பதிவேடு, கிராமசபைக் கூட்டப் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து ஊராட்சியில் மக்கள் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி