ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு? என விசிக துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வியெழுப்பியுள்ளார். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, "ஒன்றே முக்கால் கோடி தலித் மக்கள் கொண்ட இயக்கம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு? தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. மன்னராட்சியை எதிர்த்தால் சங்கி என்று சொல்கிறார்கள். 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.