ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.944.80 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு நிவாரண பணிக்கு ரூ.2000 கோடி கேட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தர வேண்டிய தொகையான ரூ.944.80 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு வந்துள்ள மத்தியக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு அதன் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.