பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

56பார்த்தது
பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்
திண்டிவனம் சட்டசபை தொகுதியில், வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு நேரில் வந்து சிரமமின்றி ஓட்டளிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது.

திண்டிவனம் சட்டசபை தொகுதியில் 267 ஓட்டுச்சாவடிகள் உள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரமாகும்.

இவர்களுக்கு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மூலம் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 90 ஆயிரம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் கூறியபடி நாளை (10ம் தேதி) பூத் சிலிப்கள் வழங்கப்பட்டு விடும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி