பட்டணம் ஊராட்சி பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

75பார்த்தது
பட்டணம் ஊராட்சி பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பள்ளியில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மேரி புளோரா வரவேற்றார். சங்க மாவட்ட தலைவர்கள் அன்னை சஞ்சீவி, அன்னை சந்தானம் செயலாளர் சுகுமார், ஐய்யப்பன், ஊராட்சி தலைவர் தலைவர் ரவி முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் பேச்சு போட்டியும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டது. சங்க பொருளாளர் நவநீதன் நன்றி கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி