திண்டிவனம், முருங்கப்பாக்கம், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி மனைவி அங்கம்மாள், 33; நேரு வீதியில் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பக்கத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவில் கட்டுவதற்காக பையில் வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாய் திருடு போனது.
இதுபற்றி அங்கம்மாள் திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, 14 வயது சிறுவன் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை தேடி வருகின்றனர்.