மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 1, 000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீகிரிஜாம்பாள் உடனுறை பூமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ரூ. 64. 50 லட்சத்தில் புதிய தேர் செய்வதற்கான பூஜை நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இப்பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.