நகராட்சி அலுவலகம் பா. ம. க. , வினர் முற்றுகை

55பார்த்தது
நகராட்சி அலுவலகம் பா. ம. க. , வினர் முற்றுகை
திண்டிவனத்தில் துணை சுகாதார நிலைய இடம், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன் பா. ம. க. , வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட சேடன்குட்டை பகுதியில், துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் திண்டிவனம், அவரப்பாக்கம் பாரதி தாசன் பேட்டை பகுதி யில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான ஆன்லைன் டெண்டர் கோரப்பட்டது. இதனையறிந்த சேடன்குட்டை பகுதி மக்கள் பா. ம. க. , மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் பா. ம. க. , வினர் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் 1: 30 மணியளவில், விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தற்போது வெளியான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கமிஷனரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து அவரப்பாக்கம் பாரதிதாசன்பேட்டையில் புதிய நகர்ப்புற துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக கோரப்பட்ட ஒப்பந்த புள்ளி, நிர்வாக காரணங்களால் ஒத்து வைக்கப்படுவதாக, நகராட்சி கமிஷனர் தமிழ்ச்செல்வி அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி