திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகர் பகுதியில் கடந்த டிச 28ஆம் தேதி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் குழந்தையை மீட்ட நிலையில், காவல்துறையிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கைப்பற்றிய போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்த பொழுது கேப்டன்
விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்த குழந்தைக்கு அவரின் நினைவாக 'விஜயா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.