இரவு 1 மணிவரை மது விற்பனைக்கு அனுமதி

72020பார்த்தது
இரவு 1 மணிவரை மது விற்பனைக்கு அனுமதி
சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் கூடும் இடமான சுற்றுலா நகரமான புதுச்சேரியில் , புத்தாண்டையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கேளிக்கை விடுதிகளில் மது விற்பனை செய்யப்படும் இடங்களில் சிறப்பு அனுமதி கிடைத்துள்ளதால் மது விற்பனை ஜோராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக புதுச்சேரியில் மற்ற நாட்களில் நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் இன்றிரவு 1 மணி வரை மது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி