புத்தாண்டு ராசிபலன் 01-01-2024

17750பார்த்தது
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் குறித்து பார்க்கலாம். மேஷம்: லாபங்கள் நிறைந்த ஆண்டாக மேஷ ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது. சனி, குரு, ராகு கேதுவின் நற்கருணையும் கிரகங்களின் பயணம் சிறப்பாக உள்ளது. உங்களுக்கு நல்லதே நடக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். 2024ஆம் ஆண்டு பொற்கால ஆண்டாக உங்களுக்கு அமைய உள்ளது. சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். ரிஷபம்: சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு அமையும். பொருளாதார வளர்ச்சி அற்புதமாக இருக்கும். லாபத்தை தரப்போகும் ராகுவினால் நிதி நெருக்கடிகள் விலகும். தொட்டது துலங்கும் வெற்றிகள் தேடி வரும். 2024ஆம் ஆண்டில் சொந்த நிலத்தில் வீடு கட்டும் யோகம் உங்களுக்கு கைகூடி வந்துள்ளது. மிதுனம்: இந்த வருடம் நீங்கள் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சனை ஓரளவுக்கு தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு இடம் மாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். உடல் வலி, கழுத்து, தோள்பட்டை மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அதனால் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. கடகம்: கடக ராசியினருக்கு இந்த ஆண்டு ஆசிர்வாதங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். பணம் விஷயத்தில் கவனமும், எச்சரிக்கையும் தேவை. வணிகம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிதாக நிலம், கடைகள் வாங்க வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பண வரவுக்கான ஆதாயங்கள் மேம்படும். உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். சிம்மம்: சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. 2024ஆம் ஆண்டு உங்களுக்கு அதி அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது. வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. கடந்த சில ஆண்டுகளாக பட்ட கடன்கள் அடைபடும். இந்த வருடம் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். 2024ஆம் ஆண்டில் வீடு, நிலம் வாங்குவீர்கள். கன்னி: புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. 2024ஆம் ஆண்டில் ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குருவின் பார்வையால் கை நிறைய சம்பளத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். இந்த ஆண்டு அதிகம் சம்பாதிக்கலாம். பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. 2024ஆம் ஆண்டில் சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் தேடி வந்துள்ளது. புது வீட்டில் குடியேறலாம். துலாம்: சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே! 2024ஆம் ஆண்டில் இந்த ஆண்டு சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொட்டதெல்லாம் பொன்னாகும் பொற்கால ஆண்டாக உங்களுக்கு அமைந்துள்ளது. விருச்சிகம்: இந்த ராசியினருக்கு இந்த ஆண்டு பலவிதத்தில் மேன்மை உண்டாக்கக் கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் நிறைந்ததாக இருக்கும். பொறுமையும், கடின உழைப்பும் உங்கள் வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரும். இந்த ஆண்டில் உங்களுக்கு அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினசரி வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும். தனுசு: 2024 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் பிறக்கும். குரு பகவான் பார்வையால் பல அற்புதங்கள் நிகழும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வாடகை வீட்டில் வசித்தவர்களுக்கு சொந்த வீட்டில் குடியேறும் யோகம் தேடி வரப்போகிறது. நிறைய நன்மைகள் உங்களுக்கு இந்த ஆண்டு நடக்கும். மகரம்: சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ப வருமானமும் அதிகமாக வரும். சித்திரை மாதத்திற்குப் பிறகு சிறப்பான யோகம் கைகூடி வரப்போகிறது. வீடு கட்டும் யோகம் உங்களுக்கு அமையும். புதிய வேலை, திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் உங்களுக்கு இந்தாண்டு அமையும். கும்பம்: கும்ப ராசியினருக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. இருக்கக்கூடிய உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ளவும். உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதும், சோம்பேறித்தனத்தை விடுத்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவதால் வேலையில் முன்னேற்றத்தை சந்திக்க முடியும். புதிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மீனம்: மீன ராசியினருக்கு இந்த வருடம் எல்லாத்துறையிலும் வெற்றியைத் தரும். வியாபாரம் கூட்டு முயற்சியால் வெற்றி கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடத்திற்கு மாறுதலும் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

தொடர்புடைய செய்தி