திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்தில் அ. தி. மு. க. , பிரசாரம்

74பார்த்தது
திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்தில் அ. தி. மு. க. , பிரசாரம்
விழுப்புரம் தொகுதி அ. தி. மு. க. , வேட்பாளர் பாக்கியராஜ், திறந்த ஜீப்பில் சென்று, திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்தில் ஓட்டு சேகரித்தார். ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில், ஆனத்துார், சேமங்கலம், மேல்தணியலாம்பட்டு, டி. குமாரமங்கலம், பொய்கை அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆலங்குப்பம், அரசூர், காந்தலவாடி, கருவேப்பிலைபாளையம், ஆனைவாரி, அரும்பட்டு, சித்தானங்கூர், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், மழையம்பட்டு, கண்ணாரம்பட்டு, கிராமம், மடப்பட்டு, எரலுார், பேரங்கியூர், மழவராயனுார், டி. எடையார் உள்ளிட்ட 40 கிராமங்களில் ஓட்டு சேகரித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் பார்த்திபன், எம். ஜி. ஆர். , மன்ற துணைத் தலைவர் சேகர், ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர் பல்லவராஜன், இளங்கோ, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ஆறுமுகம், கலியபெருமாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி