திண்டிவணத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாம்

68பார்த்தது
திண்டிவணத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாம்
திண்டிவனம் உழவர் சந்தையில் நடந்த முகாமில், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட் தலைவர் ஆனந்த வரவேற்றார். வேளாண் உதவி இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார். உழவர் சந்தை நிர்வாக அதிகாரி கவுதமன், அப்பல்லோ மெடிக்கல்ஸ் பாரிநாதன், செந்தில்நாதன், ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். 

மருந்து வணிகர் சங்க அமைப்பு செயலாளர் சத்தியசீலன் முகாமை துவக்கி வைத்தார். லயன் சங்கம் மற்றும் மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில், பொதுமக்கள், விவசாயிகள் 300 பேருக்கு, டாக்டர் தர்ஷன்சவேரி தலைமையிலான மருத்துவக் குழுவினர், பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி