மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்ய வேளாண் இயக்குனர் அறிவுரை

50பார்த்தது
மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்ய வேளாண் இயக்குனர் அறிவுரை
மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில் மக்காச்சோளம் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.,25) நடந்தது.

நிகழ்ச்சியில், மரக்காணம் வட்டார வேளாண் இயக்குனர் சரவணன் பேசியதாவது: மக்காச சோளத்தினை உணவிற்காகவும், கோழி தீவனத்திற்காகவும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். கோழிப் பண்ணைகள் அதிகரித்து வரும் நிலையில் மக்காச் சோளத்திற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மக்காச்சோளம் சாகுபடி செய்திட மணல் கலந்த களிமண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்கள் ஏற்றதாகும். உழவு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும். ஒரு ஏக்கருக்கு 4, 000 கிலோ மகசூல் எடுக்கலாம். ஏக்கருக்கு 90 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நிகர வருமானம் கிடைக்கும்.

குறைந்த நீர் பயன்பாட்டில், குறைந்த செலவில் அதிக வருமானம் பெற மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிர் செய்ய ஆர்வம் காட்ட வேண்டும். வேளாண் துறை சார்பில் மக்காச்சோளம் ஒரு எக்டருக்கு பயிரிட தேவையான வீரிய ஒட்டு விதைகள், உயிர் உரங்கள், நானோ யூரியா, அங்க உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்கள் 6 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு சரவணன் பேசினார்.

தொடர்புடைய செய்தி