விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ. தி. மு. க. , எம். எல். ஏ மனு

61பார்த்தது
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ. தி. மு. க. , எம். எல். ஏ மனு
திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி மாதம் கனமழை பெய்ததால், விவசாய பயிர்கள் சேதமடைந்தது. இது குறித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் இது வரை வராததால் திண்டிவனம் தொகுதி எம். எல். ஏ. , அர்ஜூனன் தலைமை செயலாளர் முருகானந்தத்தை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது; கடந்த ஜனவரி மாதம் 8, 9 தேதிகளில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் எதிர்பாராத விதமாக கனமழை பெய்தது. இதனால் 9 ஆயிரத்து 396 விவசாயிகளுக்கு சொந்தமான 4 ஆயிரத்து 460 ஹெக்டர் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அரசிற்கு தகவல் அனுப்பப்பட்டது. இது குறித்து நானும், வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளர் இருவருக்கும் நேரடியாக கோரிக்கை மனு அளித்துள்ளேன். மேலும் 20. 02. 2024 அன்று சட்டமன்ற பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர பேரவைத்தலைவர் அவர்களிடமும் கடிதம் கொடுத்துள்ளேன். ஆனால் இது வரை பாதிக்க பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வில்லை எனவே எனது கோரிக்கையின் அவசியம் கருதி நடவடிக்கை எடுத்து விவசாயிகள் துயர் துடைக்க வேண்டுகிறேன். என்று அந்த மனுவில் கூறியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி