புதுச்சேரி பைபாஸ் சாலையில் குவிந்து வரும் கட்டுமானக்கழிவுகள்

63பார்த்தது
புதுச்சேரி பைபாஸ் சாலையில் குவிந்து வரும் கட்டுமானக்கழிவுகள்
புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு ஏராமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இது மட்டுமின்றி இந்த சாலையையொட்டி, பல்வேறு குடியிருப்புக்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அடுக்கடுக்காக வந்து கொண்டுள்ளன. இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அப்பகுதியில் நடக்கும் கட்டடப்பணிகளில் போது ஏற்படும் கட்டுமான கழிவுகளையும், மரத்தின் வேர்களையும் சிலர் சாலையோரத்தில் மலை போல் கொட்டி வருகின்றனர். இதில் கான்கிரீட் பொருட்கள் அதிகளவில் உள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் பல்வேறு இடங்களில் கோழிக்கழிவுகளை கொட்டி வருவதால் பயங்கர துர்நாற்றம் வீசி வருகிறது. குறிப்பாக இரும்பை முதல் மொரட்டாண்டி டோல்கேட் சந்திப்பு வரையில் பல்வேறு இடங்களில் கோழிக்கழிவுகளும், கட்டுமானக்கழிவுகள் கொட்டி வருகின்றன. எனவே டோல்கேட் நிர்வாகம், இந்த சாலையில் கோழிக்கழிவுகள், கட்டுமானப்பொருட்கள் கொட்டுவதை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி